உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தமிழ் புதல்வன் திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ் புதல்வன் திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் : அரசு பள்ளியில் 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவுவதற்காக, 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்த நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில்6ம் வகுப்பு முதல்,பிளஸ் 2 வரை பயின்ற மாணவர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக, 1,000 ரூபாய், மாதந்தோறும் வழங்கப்படும். இதன் மூலம், அவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த பாட நூல்கள், பொது அறிவுப்புத்தகங்கள் வாங்குவதற்கு உதவும். 6 முதல் 8ம் வகுப்பு வரை கல்விஉரிமை சட்டம் கீழ் படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.ஆதார் எண், இஎம்ஐஎஸ் எண், வங்கி கணக்கு விபரம் ஆகிய ஆவணங்களுடன், மாணவர்கள் அந்தந்த உயர் கல்விநிறுவனங்கள் மூலம் இணையதளத்தில்விண்ணப்பிக்க வேண்டும்என, கலெக்டர் கலைச் செல்விதெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை