சென்னை: பெரவள்ளூரைச் சேர்ந்த 15 வயதான பிளஸ் 1 மாணவியின் பெற்றோர், கடந்த 6ம் தேதி, விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.அதில் குறிப்பிட்டிருந்ததாவது:தங்கள் மகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். மருத்துவ பரி சோதனையில் அந்தரங்க உறுப்பில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.அதிர்ச்சியடைந்து இதுகுறித்து அவரிடம் விசாரித்ததில், 'கபே' சென்றதில் அகிரா, 18, என்பவர் தோழியாகி உள்ளார்.கடந்த 13ம் தேதி சாலிகிராமத்தில் உள்ள ேஹாட்டலில் அகிராவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது. இதில், பங்கேற்றபோது, வில்லியம்ஸ், சோமேஷ் என்ற இருவரை, எங்கள் மகளுக்கு அகிரா அறிமுகம் செய்து வைத்துள்ளார்.இதையடுத்து அகிரா இனிப்பு வழங்கியுள்ளார்.இதை சாப்பிட்டதில்,மயங்கம் வருவதுபோல இருக்க, அகிராவிடம் தண்ணீர் கேட்ட எங்கள் மகளை, மற்றொரு அறைக்குள்அழைத்து சென்று, உள்ளே தள்ளி கதவை பூட்டியுள்ளார்.அப்போது அங்கிருந்த வில்லியம்ஸ் மற்றும் சோமேஷ் ஆகியோர், பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.'நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறக்கூடாது' என, அகிரா மிரட்டி உள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.விருகம்பாக்கம் மகளிர் போலீசார், 'போக்சோ' வழக்கு பதிவு செய்து, அகிரா, 18, மற்றும் சோமேஷ், 21, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.