உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விஜயேந்திரர் சாதுர்மாஸ்ய விரதம் ஓரிக்கையில் இன்று துவக்கம்

விஜயேந்திரர் சாதுர்மாஸ்ய விரதம் ஓரிக்கையில் இன்று துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஓரிக்கையில் மஹா பெரியவர் மணி மண்டபத்தில் இன்று முதல், செப்., 18ம் தேதி வரை, சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடிக்க இருப்பதாக சங்கர மடம் தெரிவித்துள்ளது.காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த வாரம் புனித யாத்திரையாக, ராமேஸ்வரம், திருவானைக்காவல் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.நேற்று, காஞ்சிபுரம் திரும்பிய சுவாமிகளுக்கு பக்தர்கள் சார்பில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.ஓரிக்கை மஹா பெரியவர் மணி மண்டபத்தில் முகாமிட்டிருக்கும் சுவாமிகள், அங்கு சந்திமவுலீஸ்வரர் பூஜையை தொடர்ந்தார்.மேலும், இன்று முதல், சாதுர்மாஸ்ய விரதத்தை துவக்கி, செப்., 18ம் தேதி நிறைவு செய்கிறார். சக்திமிக்க விரதங்களில் ஒன்றான சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்ளும் நாட்களில், துறவியரை வழிபடுவது மிகவும் சிறப்பாகவும் கருதப்படுகிறது.ஓரிக்கை மஹா பெரியவர் மணி மண்டபத்தில் முகாமிட்டிருக்கும் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை, பக்தர்கள் சந்தித்து ஆசி பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை