உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புதிய ரயில் நிலையம் அருகே வேகத்தடை அமைவது எப்போது?

புதிய ரயில் நிலையம் அருகே வேகத்தடை அமைவது எப்போது?

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை புதிய ரயில் நிலையம் அருகே, புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம், கடந்த 2022ம் ஆண்டு ஏப்., 7ல் திறக்கப்பட்டது.சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வரும் வாகனங்கள், புதிய மேம்பாலத்தை கடந்து, புதிய ரயில் நிலையம் செல்லும் சாலையில் வேகமாக வருகின்றன.இதனால், காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, விபத்தை தடுக்கும் வகையில், புதிய ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை அருகில், மேம்பாலத்தை ஒட்டியுள்ள பகுதியில், வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை