உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பராமரிப்பு இல்லாத மேம்பாலம் சீரமைக்க நடவடிக்கை எடுப்பாரா?

பராமரிப்பு இல்லாத மேம்பாலம் சீரமைக்க நடவடிக்கை எடுப்பாரா?

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலைகள் இணையும் நான்குமுனை சந்திப்பில் ஒரகடம் மேம்பாலம் உள்ளது.மேம்பாலம் வழியாக காஞ்சிபுரம், வேலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நிலையில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த மேம்பாலத்தில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால், சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், மேம்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.அதேபோல், மேம்பாலத்தில் உள்ள மின் கம்பங்களில் சில உடைந்து உள்ளன. மேலும், மேம்பாலத்தில் ஆங்காங்கே அரசமர செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், பாலத்தின் உறுதி தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.எனவே, மேம்பாலத்தின் மீது வளர்ந்துள்ள செடிகளை அகற்றுவதுடன், பாலத்தை முறையாக பராமரிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி