உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தொழிற்சாலை விடுதியில் இளம் பெண் தற்கொலை

தொழிற்சாலை விடுதியில் இளம் பெண் தற்கொலை

ஸ்ரீபெரும்புதுார்,:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரத்தில் மொபைல் போன் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள், தொழிற்சாலை விடுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.இந்த நிலையில், கடந்த வாரம் புதுக்கோட்டையைச் சேர்ந்த தேவிகா, 26, என்பவர், இந்த தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்து, தொழிற்சாலை விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார்.நேற்ற காலை, அறையில் உள்ள சக தோழிகள் வேலைக்கு சென்ற நிலையில், தேவிகா மட்டும் தனியாக இருந்தார். இதையடுத்து, மாலை பணி முடிந்து அவர்கள் அறைக்கு வந்து பார்த்த போது, தேவிகா துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது.சுக்குவார்சத்திரம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி