உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரயில்வே வேலை பெயரில் ரூ.15 லட்சம் மோசடி

ரயில்வே வேலை பெயரில் ரூ.15 லட்சம் மோசடி

சென்னை:பெரம்பூர், சிறுவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் மைக்கேல், 27.ஹோட்டல் ஒன்றில் காசாளராக பணியாற்றி வரும் இவருக்கு, வியாசர்பாடி ரேணுகாம்பாள் கோவில் ஐந்தாவது தெருவைச் சேர்ந்த விஜயகுமார், 30, என்பவர் அறிமுகமாகி உள்ளார்.ரயில்வேயில், 'லோகோ பைலட்' வேலை பார்ப்பதாகக் கூறிய விஜயகுமார், ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, வினோத் மைக்கேலிடம் சிறிது சிறிதாக, 15 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார். கடந்தாண்டு ஏப்ரல் மாதம், பணி நியமன ஆணை ஒன்றை விஜயகுமார் வழங்கியுள்ளார். அதை நம்பி, ரயில்வே துறையில் வேலையில் சேர மும்பை சென்ற போது, அது போலியானது எனத் தெரிந்தது. பணத்தை திருப்பிக் கேட்ட போது, விஜயகுமார் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்துள்ளார்.இதையடுத்து அவர் மீது, வினோத் மைக்கேல் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்து வந்த போலீசார், நேற்று விஜயகுமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ