உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தீயணைப்பு நிலையத்தில் 54 பட்டாசு பெட்டிகள் பறிமுதல்

தீயணைப்பு நிலையத்தில் 54 பட்டாசு பெட்டிகள் பறிமுதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையம் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில், 54 பட்டாசு பெட்டிகளை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில், தீயணைப்பு நிலையம் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலகம் இயங்கி வருகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ஆங்காங்கே லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையம் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலகம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். அங்கு, நீண்ட நேரம் ஆய்வுக்கு பின், 54 பட்டாசு பெட்டிகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ