| ADDED : ஜன 23, 2024 06:15 AM
புழல் : புழல் அடுத்த கதிர்வேடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 21; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, புழல் - -அம்பத்துார் சாலை சந்திப்பில் மது குடித்துள்ளார்.அப்போது, ரோந்து பணியில் இருந்த புழல் போலீஸ்காரர்கள் கண்ணன், மருது ஆகியோர், அவரை வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தி உள்ளனர்.ஆனால், போதையில் இருந்த விக்னேஷ், அவர்களிடம் வாக்குவாதம் செய்ததால், தங்களது இருசக்கர வாகனத்தில் அமர வைத்து, புழல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.காவல் நிலையம் அருகே சென்ற போது, திடீரென விக்னேஷ் வாகனத்தில் இருந்து கீழே குதித்து, தப்பிக்க முயன்றார். இதில், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த அவரது உறவினர்கள், விக்னேஷை போலீசார் தாக்கியதாகக் கூறி, கதிர்வேடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.அங்கு சென்ற புழல் இன்ஸ்பெக்டர் விஜயகாந்த், அவர்களை சமாதானம் செய்ததும் கலைந்து சென்றனர். காயமடைந்த விக்னேஷுக்கு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.