மேலும் செய்திகள்
'ரிவர்ஸ்' வந்த கார் மோதி தந்தை - மகன் படுகாயம்
18-Sep-2024
காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சிறுணமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன், 25. இவர், 'யமாஹா' இருசக்கர வாகனத்தில், நண்பர் அய்யப்பன் என்பவருடன், நேற்று முன்தினம், காஞ்சிபுரம் -- அரக்கோணம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.கன்னியம்மன் கோவில் அருகே சென்றபோது, எதிரே வந்த புதுச்சேரி தனியார் சுற்றுலா பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், அன்பழகன், அய்யப்பன் ஆகிய இருவரும் காயமடைந்தனர்.இருவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீவிர சிகிச்சைக்காக அன்பழகன், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நேற்று அதிகாலை, அன்பழகன் இறந்தார். விபத்து குறித்து பொன்னேரிக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18-Sep-2024