உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி

 லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, முன்னால் சென்ற லாரி மீது, பைக் மோதியதில் வாலிபர் பலியானார். சென்னை, போரூர் அருகே, மவுலிவாக்கத்தை சேர்ந்தவர் அமித் பாஷா, 21. நேற்று முன் தினம் இரவு, ஹமாஹா பைக்கில் பூந்தமல்லியில் இருந்து சுங்குவார்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மாம்பாக்கம் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற லாரியின் மீது பைக் மோதியதில், தடுமாறி கிழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அமித் பாஷா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீபெரும்துார் போலீசார் உடலை மீட்டு, பிரதே பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ