| ADDED : பிப் 15, 2024 10:25 PM
சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் கடற்கரை ஒட்டிய கடற்பகுதியில், நேற்று காலை 9:00 மணிக்கு, மர்மமான இரும்பு பேரல் மிதந்ததை, அப்பகுதி மீனவர்கள் கண்டனர்.சுமார் 200 லிட்டர் கொள்ளளவில், அதிக எடையில் இருந்த அந்த பேரலை, கயிறு கட்டி படகு மூலம், கரைக்கு இழுத்து வந்தனர்.அதன் மூடியை திறந்து பார்த்தபோது, சிமென்ட் நிறத்தில் எண்ணெய் இருப்பதை கண்டு, சதுரங்கப்பட்டினம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பேரலில் இருந்த எண்ணெய், விசைப்படகு இன்ஜின் இயக்க பயன்படுத்தப்படும் எண்ணெய் என்றும், மீதமான கழிவு எண்ணெய்யை கடலில் வீசியிருக்கலாம் எனவும், சோதனையில் தெரிய வந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.