மேலும் செய்திகள்
காஞ்சி புகார் பெட்டி
04-Dec-2025
வாலாஜாபாத்: மேல்பொடவூர் ஏரிக்கரை சாலையோரம் சாய்ந்த நிலையில் ஆபத்தாக உள்ள மின்கம்பத்தை மின் வாரியத்தினர், சீரமைக்காததால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வாலாஜாபாத் ஒன்றியம், மேல் பொடவூர் கிராமத்திற்கு பரந்துார் துணை மின் நிலையத்தில் இருந்து, மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், மேல் பொடவூர் கிராமத்தில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் வினியோகிக்கும் வகையில், அப்பகுதி ஆலமரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து ஏரிக்கரை வழியாக மின் கம்பி தடத்திற்கு சாலையோரம் நடப்பட்ட மின்கம்பங்கள் உள்ளன. இதில், அச்சாலையில் சிறுபாலம் அமைந்துள்ள தன் அருகாமையில், இரண்டு மாதங்களுக்கு முன், காற்றுடன் மழை பெய்தபோது சாலையோர ஒரு கம்பம் சாய்ந்து அங்குள்ள சீமை கருவேல மரங்களின் மீது படர்ந்து உள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள மின் ஒயர்கள் சுற்றிலும் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால், விவசாய நிலத்திற்கு செல்லும் விவசாயிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேய்ச்சலுக்காக செல்லும் கால்நடைகள் மின் ஒயரில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் மேல்பொடவூரில், சீமை கருவேல மரங்கள் மீது சாய்ந்துள்ள மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
04-Dec-2025