மேலும் செய்திகள்
நெடுஞ்சாலையில் பேனர் வைப்பதில் போட்டா போட்டி
14-Oct-2024
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் நெடுஞ்சாலைகளில் அதிகரிக்கும் பேனர்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் சுற்றுப்புறத்தில் தொழிற்சாலை அதிகரிப்பால் இந்த சாலையில் போக்குவரத்து மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.இந்நிலையில், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையோரம் உள்ள கட்டடங்களின் மீதும், அருகே உள்ள இடங்களில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.இதனால், வாகன ஓட்டிகள் கவன சிதறல் ஏற்பட்டு அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும், பலத்த காற்று அடிக்கும் போது கட்டடங்களில் உள்ள இந்த பேனர்கள் சாலையில் விழுவதால் விபத்தும் ஏற்படுகிறது.எனவே, நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
14-Oct-2024