உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சீரமைத்த ஒரே மாதத்தில் அங்கம்பாக்கம் சாலை சேதம்

சீரமைத்த ஒரே மாதத்தில் அங்கம்பாக்கம் சாலை சேதம்

வாலாஜாபாத்:அங்கம்பாக்கத்தில் புதிதாக சீரமைத்த சாலை ஒரு மாதத்திற்குள் ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது.வாலாஜாபாத் அடுத்த, அங்கம்பாக்கத்தில் இருந்து அவளூர் செல்லும் சாலை உள்ளது. இச்சாலை குறுகியதாக உள்ளதோடு, ஆங்காங்கே பழுதடைந்து குண்டும், குழியுமாக இருந்தது.இதனால், எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடப்பதில் சிரமம் இருந்ததால் சாலையை சீரமைக்க கோரிக்கை எழுந்தது.அதன்படி, இச்சாலையில் ஒன்றரை கி.மீ., துாரத்திற்கு அகலப்படுத்தி சீரமைக்க ஒருங்கிணைந்த கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, நான்கு மாதங்களுக்கு முன், மூன்று சிறுபாலம் மற்றும் சாலை சீரமைப்பு பணி துவங்கப்பட்டு, கடந்த மாதம் நிறைவு பெற்று, தற்போது பயன்பாட்டில் உள்ளது.இந்நிலையில், புதிதாக சீரமைத்த இச்சாலையின் பல பகுதிகள் ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது. மழை பொழிவு ஏற்பட்டால் இன்னும் சேதாரம் அதிகமாகும் என்பதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை