| ADDED : டிச 27, 2025 05:32 AM
சுங்குவார்சத்திரம்: சுங்குவார்சத்திரம் அடுத்த, சந்தவேலுார் தனியார் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்று வழங்கும் விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நளினி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பங்கேற்றார். கடந்த, 2024-- - 25ம் நிதி ஆண்டில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளில், 100 சதவீதம் தேர்ச்சி அளித்த, 596 இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், 363 முதுகலை பட்டதாரிகள் என, மொத்தம் 959 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் கலைச்செல்வி வழங்கி ஆசிரியர்களை கவுரவித்தார். நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எழில், மாவட்ட கல்வி அலுவலர் காந்திராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.