உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 18 இடங்களில் தானியங்கி மழைமானி

18 இடங்களில் தானியங்கி மழைமானி

காஞ்சிபுரம்:பருவமழை காலங்களில் மழையை துல்லியமாக அறியவும், வறட்சி, வெள்ளம் போன்ற இடர்பாடுகளை முன்கூட்டியே அறிய தேவையான நவீன தொழில்நுட்ப சாதனங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதிய அளவில் இல்லாமல் இருந்தது.இந்நிலையில், தமிழக மாவட்டங்களில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், மழைமானி, வானிலை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்திலும், 18 தானியங்கி மழைமானி பொருத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியர் அலுவலகம், வாலாஜாபாத் தாலுகா அலுவலகம், உத்திரமேரூர் வேடபாளையம் நுகர்பொருள் வாணிப கழக வளாகம் ஆகிய மூன்று இடங்களில், தானியங்கி வானிலை மையம் அமைக்கப்பட்டு வருகிறது என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை