உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  150 கிலோ எடையுள்ள 10 ஐஸ் கட்டிகள் உடலில் வைத்து உடைத்து விழிப்புணர்வு

 150 கிலோ எடையுள்ள 10 ஐஸ் கட்டிகள் உடலில் வைத்து உடைத்து விழிப்புணர்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், தற்காப்பு கலை குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில், கராத்தே தலைமை பயிற்சியாளர் நுார்முகமது தன் உடலில் 150 கிலோ எடையுள்ள 10 ஐஸ் கட்டிகளை ஒன்றன் பின் ஒன்றாக வைத்துக்கொள்ள, அதை, கராத்தே வீரர்கள் சுத்தியல் மூலம் உ டைத்து நொறுக்கினர். சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள இந்தியா இஷின்டிரியோ கராத்தே பயிற்சி மையம் சார்பில் பயிற்சியை நிறைவு செய்த பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 500 கராத்தே வீரர்களுக்கு பயிற்சி நிறைவு செய்ததற்கா ன பட்டை வழங்கும் விழா காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கராத்தே தலைமை பயிற்சியாளர் நுார்முகமது தலைமை வகித்தார். வேலம்மாள் பள்ளி முதல்வர் சுரேஷ்குமார், அன்னி பெசன்ட் பள்ளி தாளாளர் சேரன், தலைமை ஆசிரியர் ஜானகிராமன், அப்துல்கலாம் பள்ளி தாளாளர் அகமது அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பயிற்சியை நிறைவு செய்த கராத்தே வீரர்களுக்கு அர்ஜூனா விருது பெற்றவரும், ஒலிம்பிக் விளையாட்டு வீரருமான தேவராஜன் கராத்தே பட்டைகளை வழங்கினார். மறைந்த கராத்தே மாஸ்டர் சிஹான் ஹூசேனியின் உருவப்படத்தையும் திறந்து வைத்தார். தொடர்ந்து தலைமை பயிற்சியாளர் நுார்முகமது தற்காப்பு கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 150 கிலோ எடையுள்ள 10 ஐஸ் கட்டிகளை தனது உடலின் மீது ஒன்றன் பின் ஒன்றாக வைத்துக் கொண்டார். அதை, கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் சுத்தியல் மூலம் உடைத்து நொறுக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை