மேலும் செய்திகள்
உண்டியல் உடைத்து திருட்டு
04-Dec-2025
சூணாம்பேடு: பள்ளம்பாக்கம் காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது. பள்ளம்பாக்கம் கிராமத் தில், கொளத்துார் செல்லும் சாலையில் காளியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை 6:30 மணியளவில், இந்த கோவிலின் வழியாக கிராம மக்கள் சென்ற போது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. சூணாம்பேடு போலீசார், வழக்கு பதிந்து, கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடியவர்களை தேடி வருகின்றனர்.
04-Dec-2025