உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பஸ் தொழிலாளர் வேலை நிறுத்தம் மின்சார ரயில்களில் கூட்டம் அதிகரிப்பு

பஸ் தொழிலாளர் வேலை நிறுத்தம் மின்சார ரயில்களில் கூட்டம் அதிகரிப்பு

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மண்டலத்தில், காஞ்சிபுரம், ஓரிக்கை, உத்திரமேரூர், செங்கல்பட்டு ஆகிய ஒன்பது பணிமனைகளில், 396 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், 94 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக, காஞ்சிபுரம் மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருக்கும், போக்குவரத்து பணிமனைக்கு முன், பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இவர்களை, ஒரு ஓரமாக நின்று யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுங்கள் என, போலீசார் அறிவுரை வழங்கினர்.அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக, செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை வரையில் இயக்கப்படும் மின்சார ரயில்களில், கூட்டம் அதிகமாக காணப்பட்டன.பேருந்து நிறுத்தப்போராட்டத்தால், பேருந்துகளில் பயணம் செய்வோர்கூட தங்களின் வேலை பாதிக்கும் என்பதால், பேருந்து பயணத்தை தவிர்த்து, ரயிலில் பயணம் செய்தனர்.

பேருந்துகளின் இயக்க விபரம்

பணிமனைகள் மொத்த பேருந்துகள் இயங்கிய பேருந்துகள்காஞ்சிபுரம் 62 62ஓரிக்கை--1 46 43ஓரிக்கை--2 32 29உத்திரமேரூர் 33 31


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ