உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நவரை பருவ பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு

நவரை பருவ பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு

காஞ்சிபுரம்:பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில், விவசாயிகள் சேர்ந்து பயன்பெறலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை:'அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட்.,' என்ற நிறுவனத்தின் வாயிலாக, பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.நவரை பருவத்தில், சாகுபடி செய்யப்படும் 1 ஏக்கர் நெற்பயிருக்கு, 518 ரூபாய் வழங்கப்படுகிறது.நிலக்கடலைக்கு, 482 ரூபாய் பிரீமியம் தொகையாக, வரும் 31ம் தேதி வரை செலுத்தலாம். அதேபோல், 1 ஏக்கர் கரும்பு பயிரிடும் விவசாயிகள், 1,160 ரூபாய் பிரீமியம் கட்டணமாக, மார்ச்- 31க்குள் காப்பீடு செய்யலாம். எனவே, அந்தந்த கிராமங்களில் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையங்களில் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். குறிப்பாக, பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும் விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், கணினி, சிட்டா, வங்கி புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, பயிர் காப்பீடு தொகை செலுத்தி, ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை