உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிறிஸ்துமஸ் விழா காஞ்சியில் விமரிசை

கிறிஸ்துமஸ் விழா காஞ்சியில் விமரிசை

காஞ்சிபுரம், கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ சர்ச், தாமல்வார் தெரு துாய இதய அன்னை சர்ச் உள்ளிட்டவற்றில், நேற்று முன்தினம் இரவு, வண்ண மயமான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுஇருந்தது.இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையில், சர்ச்சில் அழகியகுடில் அமைக்கப்பட்டு, பல நிற நட்சத்திரங்கள் மற்றும் மின்விளக்கு களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.கிறிஸ்துமஸ் தினமான நேற்று காலை சர்ச்சில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்துவ மக்கள் பங்கேற்றனர்.கிறிஸ்துவர்கள் மட்டு மின்றி ஹிந்துக்களும் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, நண்பர்கள், உறவினர்களுக்கு, கேக் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை