மேலும் செய்திகள்
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் விழா
02-Oct-2024
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அருகே, காவணிப்பாக்கம், பேரணக்காவூர், சித்தனக்காவூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியினர், காஞ்சிபுரம் செல்ல வேண்டுமெனில், சாலவாக்கம்- திருமுக்கூடல் பிரதான சாலைக்கு வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து, காஞ்சிபுரம் செல்கின்றனர்.இதனால், மழை மற்றும் வெயில் நேரங்களில் காஞ்சிபுரம் செல்ல அவதிபடும் நிலை உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து, திருமுக்கூடல் வழியாக சாலவாக்கத்திற்கு தடம் எண் 80, அரசு பேருந்து இயங்குகிறது. திருமுக்கூடல் அடுத்து, அருங்குன்றம் பட்டா போன்ற கிராமங்கள் வழியாக செல்லும் இப்பேருந்து, பட்டா அடுத்து, 3 கி.மீ., தூரத்திற்கு குடியிருப்புகள் இல்லாத காட்டுப்பகுதி வழியாக சாலவாக்கம் சென்றடைகிறது.இதற்கு பதிலாக, பட்டா கிராம சாலையில் இருந்து பிரிந்து, காவணிப்பாக்கம், பேரணக்காவூர், சத்யா நகர், பொற்பந்தல் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சாலவாக்கம் சென்று, மீண்டும் இக்கிராமங்கள் வழியாகவே காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என, அக்கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதன்படி, காவணிப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் வழியிலான பேருந்து சேவையை உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று துவக்கி வைத்தார். சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார், அரும்புலியூர் ஊராட்சி தலைவர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
02-Oct-2024