உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காசோலை வழங்கியதில் முறைகேடு கலெக்டரிடம் கவுன்சிலர் மனு 

காசோலை வழங்கியதில் முறைகேடு கலெக்டரிடம் கவுன்சிலர் மனு 

காஞ்சிபுரம் : வாலாஜாபாத் பேரூராட்சி செலவினங்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகளில், முறைகேடு நடந்துள்ளதாக அ.தி.மு.க., கவுன்சிலர், காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.வாலாஜாபாத் பேரூராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் அரிகுமார் அளித்த மனு:வாலாஜாபாத் பேரூராட்சியில், எழுதுபொருள் செலவினங்களுக்கு, 2.50 லட்சம், மின் விளக்குகளுக்கு, 40 லட்சம், குடிநீர் பராமரிப்பு செலவினங்களுக்கு, 72 லட்சம், துப்புரவு பணிகளுக்கு, 50 லட்சம் ரூபாய் என, பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.இந்த செலவினங்களுக்கு வழங்கிய காசோலை வழங்கியதில், முறைகேடுகள் நடந்துள்ளன.இதுகுறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் அளிக்க கோரி, பேரூராட்சி நிர்வாகம் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.எனவே, 2022ம் ஆண்டு, ஜூன் மாதம் முதல், 2023 டிசம்பர் மாதம் முடிய காசோலைகள் எடுக்கப்பட்ட விபரங்களை, முறையாக ஆய்வு செய்து உண்மையான தகவல் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை