உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்து அபாயம்

 சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்து அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் - மணிமங்கலம் சாலையில், நாவலுார் சந்திப்பு அருகே, சாலை மையத்தடுப்பில் படுத்துள்ள மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் -- மணிமங்கலம் சாலையை பயன்படுத்தி, சேத்துபட்டு, மலைப்பட்டு, மாகாணியம், சோமங்கலம், புஷ்பகிரி, கொளத்துார், நாவலுார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சென்று வருகின்றனர். தவிர, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, தாம்பரம் -- முடிச்சூர் சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, கொளத்துார், நாவலுார் பகுதிகளில் மாடுகளை வளர்ப்போர், மாடுகளை கொட்டகை அமைத்து பராமரிப்பது இல்லை. அவை போக்கு வரத்திற்கு இடையூறாக சாலையில் வலம் வருவதோடு, சாலை மையத் தடுப்புகளில் படுத்து ஓய்வெடுக்கின்றன. அவை, திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால், சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, விபத்திற்கு வழிவகுக்கும் விதமாக, சாலை மற்றும் மையத் தடுப்பில் ஓய்வெடுக்கும் மாடுகளை பிடித்து, மாட்டுத்தொழுவத்தில் அடைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை