உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  மேம்பாலம் மைய தடுப்பில் இரும்பு தகடு சேதம்

 மேம்பாலம் மைய தடுப்பில் இரும்பு தகடு சேதம்

காஞ்சிபுரம்: வெள்ளைகேட் மேம்பாலம் மைய தடுப்பில் ஏற்பட்ட இரும்பிலான தகடு சேதத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை - பெங்களூரு இடையே, தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலை செல்கிறது. இச்சாலை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறுவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகின்றன. காஞ்சிபுரம் காரப்பேட்டை முதல், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை வரையில், 36 கி.மீ., விரிவுபடுத்தும் பணி நிறைவு பெற்றுள்ளன. வெள்ளைகேட், ஆரியபெரும்பாக்கம், கீழம்பி ஆகிய மேம்பாலங்களின் வழியாக, பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. பெரும்பாலான மேம்பாலங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை மையத்தின் நடுவே இரும்பிலான தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், வெள்ளைகேட் மேம்பாலத்தின் மைய தடுப்பில் அமைக்கப்பட்ட இரும்பிலான தகடு சேதம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால், வெள்ளைகேட் மேம்பாலம் அருகே வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வெள்ளைகேட் மேம்பாலத்தில் சாலை மையத்தின் நடுவே சேதம் ஏற்பட்டிருக்கும் இரும்பு தடுப்பை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ