உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் வேளாக்குறிச்சி ஆதீனம் சுவாமி தரிசனம்

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் வேளாக்குறிச்சி ஆதீனம் சுவாமி தரிசனம்

காஞ்சிபுரம் : நாகை மாவட்டம், திருப்புகலுார், திருக்கயிலாய வேளாக்குறிச்சி ஆதீனம் 18வது குரு மஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமசாரிய சுவாமிகள் நேற்று, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு வந்தார்.காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யமும், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளருமான சுந்தரேச அய்யர், சங்கரமடம் மற்றும் காமாட்சியம்மன் கோவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கலைராம வெங்கடேசன் உள்ளிட்டோர் ஆதீனத்தை வரவேற்றனர்.காமாட்சியம்மனை தரிசனம் செய்த ஆதீனம்,பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அதை தொடர்ந்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி காமாட்சியம்மன் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியை பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்