உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க பக்தர்கள் வேண்டுகோள்

 பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க பக்தர்கள் வேண்டுகோள்

வாலாஜாபாத்: உள்ளாவூ ரில், பழுதான நிலையிலான பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியம், உள்ளாவூர் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒருகால பூஜை தொடர்ந்து நடைபெறுகிறது. இக்கோவில் பராமரிப்பின்மை காரணமாக பழுதடைந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன், கோவில் மண்டபத்தின் முன் பகுதி கட்டடம் இடிந்தது. அதை தொடர்ந்து கட்டட கருங்கற்கள் அங்கும், இங்குமாக சிதறிய நிலையில் காணப்படுகிறது. தற்போது இக்கோவில் கட்டடம் பழுதடைந்து நாளுக்கு நாள் பலவீனமாகி வருகிறது. கோவிலின் கோபு ர பகுதியை சுற்றி உள்ள சுவாமி உருவ ப டங்கள் சிதிலம் அடைந்து, கான்கிரீட் பெயர்ந்து உள்ளது. மண்டபத்திற்குள் மழைநீர் சொட்டுவதோடு, விமான கோபுரமும் மிகவும் சிதிலமடைந்து கான்கிரீட் பெயர்ந்து, செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. எனவே, இக்கோவிலை புனரமைக்க அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் சிவராமகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகம் முழுதும் உள்ள பழமையான மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களை புனரமைக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையிலான பட்டியலில் உள்ளாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதால், ஆய்வு குழுவினர் பரிந்துரையை அடுத்து கோவில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை