மேலும் செய்திகள்
2 ஆண்டாக திறக்கப்படாத பொது கழிப்பறை கட்டடம்
22-Jan-2025
காலுார்:காஞ்சிபுரம் ஒன்றியம் காலுார் ஊராட்சி, பெரியநத்தம் கிராமம் பொன்னியம்மன் கோவில் எதிரில், அப்பகுதி வாசிகள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, ‛ஸ்வச் பாரத் மிஷன் கிராமின்' மாவட்ட ஊராட்சி மற்றும் 2022 - -23ம் நிதியாண்டின் 15வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், 7.85 லட்சம் ரூபாய் செலவில் சமுதாய கழிப்பறை கட்டப்பட்டது.கட்டுமான பணி முடிந்து, ஒரு மாதத்திற்கு மேலாகியும், கழிப்பறை திறக்கப்பட்டு பகுதிவாசிகள் மற்றும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க சிரமப்படுகின்றனர்.மேலும், கட்டடமும் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, காலுாரில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காலுார் வாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.
22-Jan-2025