மேலும் செய்திகள்
செடிகளால் குடிநீர் தொட்டி வலுவிழக்கும் அபாயம்
5 minutes ago
களக்காட்டூர் சாலை பேட்ச் ஒர்க் வேலை துவக்கம்
8 minutes ago
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனை நுழைவாயில் எதிரே உள்ள, மழைநீர் வடிகால்வாய் மீது பதிக்கப்பட்டுள்ள கான்கிரீட் சிலாப் உடைந்துள்ளதால், வாகனங்களில் வரும் நோயாளிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுாரில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டாரத்தைச் சேரந்த 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் நாள்தோறும் பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அதேபோல, ஸ்ரீபெரும் புதுார் சுற்றுவட்டார பகுதிகளில் வாடகைக்கு தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள், சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், அரசு மருத்துவமனை நுழை வாயில் எதிரே உள்ள, மழைநீர் வடிகால்வாய் மீது பதிக்கப்பட்டிருந்த கான்கிரீட் சிலாப் உடைந்து உள்ளது. இதனால், சிகிச்சைக்காக பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் வரும் நோயாளிகள், விபத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக, சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, அவசர சிகிச்சைக்காக வரும் ஆம்புலன்ஸ், மருத்துவமனை நுழைவாயிலில் திரும்பும் போது, விபத்து ஏற்படும் அச்சத்தில் ஓட்டுநர்கள் சென்று வருகின்றனர். எனவே, சேதமடைந்த மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
5 minutes ago
8 minutes ago