| ADDED : டிச 10, 2025 07:55 AM
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் பஞ்சுகொட்டி தெருவில், போக்குவரத்திற்கு இடையூறாக, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த மின்கம்பங்களை, மின்வாரியத்தினர் நேற்று அகற்றினர். காஞ்சிபுரம் பஞ்சுகொட்டி தெரு வழியாக, பல்வேறு பகுதிகளுக்கும், அப்பகுதியினர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூறாக ஐந்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதனால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் விபத்தில் சிக்கி வந்தனர். இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் நேற்று, படத்துடன் வெளியானது. இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள், பஞ்சுகொட்டி தெருவில், போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த மின்கம்பங்களை நேற்று அகற்றினர்.