உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரயிலில் அடிபட்டு பெண் வக்கீல் பலி

ரயிலில் அடிபட்டு பெண் வக்கீல் பலி

பெருங்களத்துார்:கிருஷ்ணகிரி மாவட்டம், கொளஞ்சியைச் சேர்ந்தவர் அம்சவள்ளி, 49; வழக்கறிஞர். இவர், பெருங்களத்துாரில் தங்கி, வழக்கறிஞராக பணிபுரிந்து வந்து உள்ளார். சம்பவத்தன்று பேருந்து நிலையம் செல்வதற்காக நடந்து சென்றார்.பெருங்களத்துார் ஏரிக்கரை நிறுத்தம் அருகே, தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாம்பரம் ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.காதில், 'ஹெட்போன்' இருந்ததால், கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்தபோது ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி