உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு தீயணைப்பு துறையினர் மீட்பு

கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு தீயணைப்பு துறையினர் மீட்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுவை, தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். காஞ்சிபுரம் கலெக்ட்ரேட் அருகே உள்ள காந்தி நகரில், நேற்று, காலை 8:00 மணிக்கு, பசு ஒன்று மேய்ச்சலுக்காக வந்தது. அப்போது, சாலையோரம் இருந்த 10 அடி ஆழமுள்ள பாழடைந்த கழிவுநீர் தொட்டியில் பசு தவறி விழுந்தது. வெளியேற முடியாமல் பசு கத்தியது. அருகில் இருந்தவர்கள் காஞ்சி புரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, காஞ்சிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சென்று, கயிறு மூலம் பசுவை மீட்க முயன்றனர். குறுகலான தொட்டியில் பசு சிக்கியதால் பசுவை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. அதையடுத்து பொக்லைன் இயந்திரம் உதவியுடன் இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பசுவை உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை