உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வனப்பகுதியில் குவியும் குப்பை

வனப்பகுதியில் குவியும் குப்பை

ஸ்ரீபெரும்புதுார்:வனப்பகுதியில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குன்றத்துார் ஒன்றியத்தில் உள்ள வைப்பூர் ஊராட்சியில், வைப்பூரில் இருந்து காரணித்தாங்கல் செல்லும் சாலையில் ஒரு குன்று உள்ளது.வனத்துறைக்கு சொந்தமான இந்த இடத்தில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பிளாஸ்டிக் பைகளில் குப்பையை கட்டி வீசி செல்கின்றனர். இதனால், வனப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, வனப்பகுதியில் அத்துமீறி, குப்பை கொட்டுபவர்களை கண்காணித்து, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி