உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  குடிநீர் தொட்டியின்கீழ்  குப்பை சுகாதார சீர்கேடு

 குடிநீர் தொட்டியின்கீழ்  குப்பை சுகாதார சீர்கேடு

குன்றத்துார், : கொல்லச்சேரியில் குடிநீர் தொட்டியின் கீழ் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.குன்றத்துார் ஒன்றியத்தில், கொல்லச்சேரி ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு சேகரமாகும் குப்பை குன்றத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே ஊராட்சிக்கு சொந்தமான காலி நிலத்தில் கொட்டப்படுகிறது.அங்கு கொல்லச்சேரி ஊராட்சி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே குப்பை கொட்டி எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.இந்த பகுதியில் குப்பை கொட்டுவதை ஊராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை