உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் ரத்து

காஞ்சியில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் ரத்து

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர்; திருத்தணி ஆகிய கோட்டங்கள் செயல்படுகின்றன. முதல் வார வியாழக்கிழமை தினத்தில், திருவள்ளூர் மின் பகிர்மான கோட்டம். இரண்டாவது வார வியாழக்கிழமை தினத்தில், திருத்தணி மின்பகிர்மான கோட்டம். மூன்றாவது வார வியாழக்கிழமை தினத்தில், காஞ்சிபுரம் வடக்கு மின் பகிர்மான கோட்டம். நான்காவது வார வியாழக்கிழமை தினத்தில், காஞ்சிபுரம் தெற்கு மின் பகிர்மான கோட்டம் ஆகிய நான்கு கோட்டங்களிலும், தனித்தனியாக மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெறும்.லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால், தேர்தல் நடத்தை விதிகள் தளர்விற்கு பிறகே, மின் நுகர்வோர் கூட்டம் நடைபெறும் என, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை