உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு ‛ரெயின் கோட் வழங்க வலியுறுத்தல்

ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு ‛ரெயின் கோட் வழங்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில், உள்ள குப்பையை சேகரிக்க நிரந்தர மற்றும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் வீடுகள் மற்றும் தெரு பகுதிகளில் உள்ள குப்பை சேகரித்து, துாய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இப்பணிகளில், ஈடுபட்டுள்ள நிரந்தர துாய்மை பணியாளர்களுக்கு மட்டும் சமீபத்தில் ‛ரெயின் கோட்' வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு 'ரெயின்கோட்' வழங்கவில்லை,இதனால், சில தினங்களாக உத்திரமேரூரில் பெய்து வரும் மழையில், ஒப்பந்த பணியாளர்கள், மழையால் நனைந்தபடியே துாய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.எனவே, ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கும், ‛ரெயின் கோட்' வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை