| ADDED : ஜன 09, 2024 10:18 PM
செங்கல்பட்டு:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், புலிப்பாக்கம் கூட்டுச் சாலை பகுதியில், கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது, சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி, 'யமஹா ஆர்15' இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், இருசக்கர வாகனத்தை 'வீலிங்' செய்தபடி, சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சென்றுள்ளார்.போலீசார் பிடிக்க முயன்றபோது, அந்த நபர் காஞ்சிபுரம் சாலையில் தப்பிச்சென்றார்.இது குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது, அந்த வீடியோக்கள் இன்ஸ்டாகிராம், வாட்ஸாப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.அதன் அடிப்படையில், பைக் சாகசத்தில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் அடுத்த பட்டா கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி, 22, என்பவரை, நேற்று செங்கல்பட்டு தாலுகா போலீசார் கைது செய்தனர்.அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், விசாரணை பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.