உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இளம்பெண் தீக்குளிப்புஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் தீக்குளிப்புஆர்.டி.ஓ., விசாரணை

காஞ்சிபுரம்:இளம்பெண் தீக்குளித்து இறந்தார். ஆர்.டி.ஓ., விசாரித்து வருகிறார்.வண்டலூர் அடுத்த, மண்ணிவாக்கம் கக்கன்ஜி தெருவை சேர்ந்தவர் தேவராஜ். ரேடியோ சவுண்டு சர்வீஸ் கடை வைத்துள்ளார். இவரது மனைவி மீனாட்சி, 24. திருமணமாகி ஆறு ஆண்டுகளாகிறது. மூன்று மகன்கள் உள்ளனர்.குடும்பப் பிரச்னை காரணமாக, கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு, மீனாட்சி, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளித்து இறந்தார். இது குறித்து, ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆர்.டி.ஓ., செல்லப்பா விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை