| ADDED : ஜன 10, 2024 11:14 PM
மண் அரிப்பால் சாலை ஓரம் பள்ளம்
காஞ்சிபுரத்தில் இருந்து, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி வழியாக சென்னை செல்லும் வாகனங்கள் பொன்னேரிக்கரை சாலை வழியாக சென்று வருகின்றன.வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், பொன்னேரிக்கரையை ஒட்டியுள்ள பகுதியில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், சாலை ஓரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது. கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, சாலையோர பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சி.மணிகண்டன், காஞ்சிபுரம். சாலையில் வைக்கோல் உலர்த்துவதால் வாகன ஓட்டிகள் அவதி
வாலாஜாபாத் ஒன்றியம்,- ஏனாத்துாரில் உள்ள விவசாயிகள், தங்களது நிலத்தில் நெல் அறுவடைக்குப்பின் மீதமாகும் வைக்கோலை பிரதான சாலையில் உலர்த்துகின்றனர்.இதனால், வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.எனவே, ஏனாத்துார் சாலையில் ஆபத்தான முறையில் வைக்கோல் உலர்த்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.மதனகோபால், காஞ்சிபுரம்.