உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கார்த்திகை சோமவார விழா சத்யநாத சுவாமி வீதியுலா

கார்த்திகை சோமவார விழா சத்யநாத சுவாமி வீதியுலா

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் திருக்காலிமேடில், பழமையான சத்யநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை மாத நான்காவது சோமவார விழா நேற்று நடந்தது. இதில், காலை 7:00 மணிக்கு சுவாமிக்கும், பிரமராம்பிகைக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.தொடர்ந்து பிரமராம்பிகையுடன், மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் சத்யநாதேஸ்வரர், வடக்கு மாட வீதி, கவரை தெரு, சவுராஷ்டிரா தெரு, பாலாஜி நகர், அல்லாபாத் ஏரிக்கரை வழியாக சின்ன காஞ்சிபுரம் பகுதியில் வீதியுலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து சுவாமி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை