உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருமாகரலீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

திருமாகரலீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, மாகரல் கிராமத்தில், திருபுவன நாயகி உடனுறை திருமாகரலீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் உபயதாரர்கள் மற்றும் பொது நல நிதியில் இருந்து பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன.கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 8:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மஹாலஷ்மி, நவக்கிரக பூஜை உள்ளிட்டவையும், மாலை 5:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை துவங்குயது.நாளை அதிகாலை 3:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. அதிகாலை 4:30 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, தொடர்ந்து ராஜகோபுரம், விமானம், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி வேதவிற்பன்னர்கள் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கின்றனர்.காலை 7:30 மணிக்கு மஹா அபிஷேகம், தொடர்ந்து மஹாதீப ஆராதனை, மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதியுலா நடக்கிறது.கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் கதிரவன், தக்கார் வஜ்ஜிரவேலு, உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் மாகரல் கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி