மேலும் செய்திகள்
நுாறு சதவீதம் வருகை; மாணவர்களுக்கு பாராட்டு
27-Mar-2025
அய்யங்கார்குளம்:காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2013 - 2015 வரை, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் பயின்ற முன்னாள் மாணவ- - மாணவியர் ஒருங்கிணைந்து, ‛மீண்டும் பள்ளிக்கு செல்வோம்' என்ற பெயரில் சந்திப்பு கூட்டத்தை நேற்று நடத்தினர்.இதில், தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியரை நினைவு கூர்ந்து, ஒவ்வொருவருக்கும் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினர்.பள்ளிக்கு பீரோ மற்றும் புரவலர் நிதி வழங்கினர். பள்ளியில் படிக்கும்போது நடந்த சுவாரசியமான சம்பவங்களையும், பள்ளி படிப்புக்குப்பின் தங்களது கல்லுாரி படிப்பு, பணி விபரம், குடும்ப சூழல் குறித்து நினைவு கூர்ந்தனர்.சந்திப்பின் நினைவாக முன்னாள் மாணவ- - மாணவியர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் கலாவல்லி நன்றி கூறினார்.
27-Mar-2025