உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் பேரூராட்சியில் நீர்நிலைகள் பராமரிப்பு

உத்திரமேரூர் பேரூராட்சியில் நீர்நிலைகள் பராமரிப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், நீர்நிலைகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள 40.60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிதியில், காக்கநல்லூர், மல்லிகாபுரம், எம்.ஜி.ஆர்., நகர், அரசன் நகர், நல்லூர், நீரடி உள்ளிட்ட பகுதிகளில் உத்திரமேரூர் ஏரிநீர் பாசன கால்வாய்கள் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.இதேபோன்று, மல்லியங்கரணை, நல்லூர், காக்கநல்லூர், அண்ணா நகர், காட்டுப்பாக்கம், வேடபாளையம் ஆகிய பகுதிகளில் பொதுக்குளம் தூர்வாரி சீரமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.வேடபாளையம் பொதுக்குளம் பகுதியில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்.உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார், செயல் அலுவலர் லோகநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ