உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மணிமங்கலத்தில் மனைவியின் கள்ளக்காதலனை வெட்டியவர் கைது

மணிமங்கலத்தில் மனைவியின் கள்ளக்காதலனை வெட்டியவர் கைது

மணிமங்கலம்;படப்பையை அடுத்த நாவலுார் குடியிருப்பை சேர்ந்தவர் சுரேஷ், 40; கொத்தனார். இவரது மனைவி பார்வதி. திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகின்றன. மூன்று மகன்கள் உள்ளனர்.பார்வதிக்கும், எதிர் பிளாக்கில் வசித்து வரும் பிரவீன், 30, என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த சுரேஷ், மனைவியை கண்டித்துள்ளார். இதனால், பார்வதி கோபித்துக் கொண்டு, கடந்த 8ம் தேதி வீட்டை விட்டு சென்றதாக தெரிகிறது.இதனால், மன உளைச்சலில் இருந்த சுரேஷ், மனைவி வீட்டை விட்டு செல்வதற்கு பிரவீன் தான் காரணம் என்ற ஆத்திரத்தில், நேற்று முன்தினம் இரவு, கத்தியால் அவரை, கை, கால் மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக வெட்டினார்.இதில், படுகாயம் அடைந்த பிரவீனை, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது தொடர்பாக, மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, சுரேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை