மொபைல் போன் கடைகள் சங்க விழா
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட மொபைல் போன் கடைகள் நலச்சங்கம் 6ம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் சாரதி, முன்னாள் தலைவர் சுரேஷ் ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். சங்க செயலர் சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். இதில், கார்ப்பரேட் நிறுவனங்களில் மட்டுமே கிடைத்து வந்த சில மொபைல்கள், வரும் காலங்களில் நம் கடைகளிலும் கிடைக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைவரும் ஒரே விலையில் மொபைல் போன் விற்பனை செய்தால் அனைவருக்கும் நன்மையாக இருக்கும். சிம் கார்டு டீலர்கள் தனிப்பட்ட முறையில் 'ஸ்டால்' அமைக்க அனுமதிக்கக் கூடாது. அந்தந்த பகுதியில் உள்ள மொபைல் போன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.