உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

 சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

கோனேரிகுப்பம்: காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, மாட்டு தொழுவத்தில் ஒப்படைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை சாலை வழியாக சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இச்சாலையை ஒட்டியுள்ள கோனேரிகுப்பம் ஊராட்சியில் மாடுகளை வளர்ப்போர், அவற்றை தங்கள் வீட்டில் கொட்டகை அமைத்து பராமரிக்காமல், மேய்ச்சலுக்காக வெளியே அவிழ்த்து விடுகின்றனர். வாகன போக்குவரத்து நிறைந்த பொன்னேரிக்கரை சாலையில், மாடுகள் சாலையை மறித்து நிற்பதோடு, குறுக்கும் நெடுக்குமாக மிரண்டு ஓடுவதால், பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, மாட்டு தொழுவத்தில் ஒப்படைக்க, கோனேரிகுப்பம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி