உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  தேசிய அளவிலான கராத்தே போட்டி : காஞ்சி மாணவ - மாணவியர் சிறப்பிடம்

 தேசிய அளவிலான கராத்தே போட்டி : காஞ்சி மாணவ - மாணவியர் சிறப்பிடம்

காஞ்சிபுரம்: ஈரோடில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில், காஞ்சிபுரம் மாணவ - மாணவியர் சிறப்பிடம் பெற்றனர். இக்கோவாஷி கராத்தே டூ அசோஷியேசன் ஆப் இந்தியா சார்பில், தேசிய அளவிலான கராத்தே போட்டி, ஈரோடு மாவட்டம் டெக்ஸ்ட்வேல் உள்ளரங்கில் கடந்த 9ம் தேதி நடந்தது. இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட மாணவ - -மாணவியர் பங்கேற்றனர். இப்போட்டியில், காஞ்சிபுரம் இக்கோவாஷி கராத்தே டூ அசோஷியேசன் ஆப் இந்தியா பயிற்சி பள்ளியின் தலைமை கராத்தே பயிற்சியாளர் பிரபாகரன் தலைமையில் 7 மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில், காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவி ஹேமாவதி, கட்டா பிரிவில் முதல் பரிசு பெற்றார். காஞ்சி குளோபல் பள்ளி 8ம் வகுப்பு மாணவர் ஸ்ரீவைகுண்டர், குமித்தே பிரிவில் முதலிடம் பெற்றார். குருஷேத்ரா பப்ளிக் பள்ளி 6ம் வகுப்பு மாணவர் கேசவ், இன்பன்ட்ஜீசஸ் பள்ளி 9ம் வகுப்பு மாணவர் நித்திஷ். பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவர் ரோஹித், அந்திரசன் மேல்நிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவர் ரித்திக், திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவர் முகிலன் ஆகியோர் குமித்தே பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்றவ மாணவ - மாணவியருக்கு உலக கராத்தே சங்க நடுவர் சம்பத்குமார், ட்ரெடிஷ்னல் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் செழியன் ஆகியோர் கோப்பை, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை