உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கீழ்வெண்பாக்கம் சிறுபாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

கீழ்வெண்பாக்கம் சிறுபாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

காஞ்சிபுரம்,:ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர் கிராமத்தில் இருந்து, திருமால்பூர் வழியாக பனப்பாக்கத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக பள்ளூர், கணபதிபுரம், காஞ்சிபுரம், புள்ளலுார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தோர், பல்வேறு தேவைகளுக்கு திருமால்பூர், பனப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.கீழ்வெண்பாக்கம் சாலை குறுக்கே, சிறுபாலம் கடந்து செல்கிறது. இந்த சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் இல்லை. மேலும், சாலையோரத்தில் மின் விளக்கு வசதிகளும் இல்லை. இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது. எனவே, கீழ்வெண்பாக்கம் சாலையில் உள்ள சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை