உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூரில் செயல்படாத சிசிடிவி கேமராக்கள்

உத்திரமேரூரில் செயல்படாத சிசிடிவி கேமராக்கள்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் நகரில் குற்றச்சம்பவங்கள் மற்றும்சட்டவிரோத செயல்களை தடுக்கும் பொருட்டு நகரின்முக்கிய பகுதிகளில், காவல்துறை மூலம் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிறப்பு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.பேரூராட்சிக்குட்பட்ட இணைப்பு தெரு பகுதிகள் மற்றும் பேருந்து நிலையம், உத்திரமேரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி போன்ற பொது இடங்களிலும், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.இதில், பெரும்பாலான கேமராக்கள், சில மாதங்களாக செயல்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.உத்திரமேரூரில் சமீப காலமாக மக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளிலும், பொது இடங்களிலும் இருசக்கரவாகனங்கள் அதிக அளவில் திருடப்படுகின்றன.பொது இடங்களில் பொருத்திய கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாத காரணத்தால், இருசக்கர வாகனங்களை திருடுதல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.எனவே, உத்திரமேரூர் பகுதியில் செயல்படாத, 'சிசிடிவி' கேமராக்களை சரி செய்து சட்ட விரோத செயல்களை தடுக்க உதவுமாறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை